காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதல் பிரிவில், இந்தியாவின் ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது 5-வது பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
தற்போது ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

