சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதே வழக்கில், டெராவின் முன்னாள் அரசியல் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஆதேப் நஜிப் என்பவருக்கும் திட்டமிட்ட கொலை மற்றும் சித்திரவதை குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இல்லாத நிலையில் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில், பஷர் அல்-அசாத் டமாஸ்கஸிலிருந்து தப்பி மாஸ்கோ சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


