ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் (Claude) செயற்கை நுண்ணறிவு, மனிதர்களால் கண்டறியப்படாத புதிய உயிரியல் அமைப்பொன்றை டிஎன்ஏ தரவுகளில் கண்டறிந்துள்ளது. 'ஏஆர்டி' (ART - array-associated reverse transcriptases) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு, மரபணு திருத்த தொழில்நுட்பமான கிரிஸ்பர் (CRISPR) போன்ற சில பண்புகளைக் கொண்டுள்ளது. சுமார் 950 கிளாட் ஏஐ முகவர்கள், 21 மணிநேர கால அவகாசத்தில் 2,00,000-க்கும் மேற்பட்ட என்சைம்களை ஆய்வு செய்தபோது, பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ் ஒன்றினுள் இருந்த விசித்திரமான மீண்டும் மீண்டும் வரும் அமைப்பை இது கண்டறிந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த கிரிஸ்பர் தொழில்நுட்ப முன்னோடியான ஃபெங் ஜாங், இது மிகவும் சுவாரஸ்யமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அமைப்பு என்ன செய்கிறது என்பது குறித்த ஆய்வுகள் இன்னும் மர்மமாகவே உள்ளன.
எதிர்காலத்தில், கோடிக்கணக்கான உயிரியல் சாத்தியக்கூறுகளை ஏஐ மூலம் ஆராய்ந்து, முக்கியமான கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை ஆய்வகங்களில் உறுதிப்படுத்தும் பணியில் மனித ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்த முடியும் என்பதால், இது அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மாற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


