ETN NewsNews. Trust. Impact.
Health

ஆண்டுக்கு 43,000 தாய்மார்கள் மரணம் - லான்செட் ஆய்வு

15 ஜூன், 2026, 02:24 PM
மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பதற்கு, பிரசவத்துக்குப் பிந்தைய அதிக ரத்தப்போக்கே (PPH) உலகளவில் முக்கியக் காரணம் என 'தி லான்செட்' மருத்துவ இதழின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. முறையான விழிப்புணர்வு இல்லாததால், உலகெங்கும் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு தாய் அதிக ரத்தப்போக்கால் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2.7 கோடி பெண்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், 43 ஆயிரம் பெண்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றனர். இது ஏழை மற்றும் நடுத்தர ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகம் நிகழ்கிறது. இதை தடுக்க, தோராயமாக ரத்த இழப்பைக் கணிப்பதைத் தவிர்த்து, துல்லியமான அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என லான்செட் பரிந்துரைத்துள்ளது. மேலும், ரத்தப்போக்கை முன்கூட்டியே கண்டறிந்து, கர்ப்பப்பை மசாஜ் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை வழங்கும் 'இ-மோட்டிவ்' என்ற 5 அம்ச எளிய முதலுதவி சிகிச்சை முறையையும் இந்த ஆய்வு முன்மொழிந்துள்ளது. உலக நாடுகள் தங்களது சுகாதார பட்ஜெட்டில் 5 சதவீதத்தை இதில் முதலீடு செய்தாலே, ஆயிரக்கணக்கான தாய்மார்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என லான்செட் இதழ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை புதிய தலைமுறையிடம் பேசுகையில், பிரசவ கால ரத்தப்போக்கால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க, பெண்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...