"ஒரு நாடு உங்களைத் திரும்பிச் செல்லச் சொன்னால், தாய்நாட்டிற்குத் திரும்புவதுதான் சரியான முடிவு. வேறு என்ன செய்ய முடியும்? அங்கேயே தங்க அனுமதிக்குமாறு கெஞ்சுவதா? அல்லது சட்டவிரோதமாகத் தங்குவதா?" என்று ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்கொள்ளும் குடியேற்றச் சிக்கல்கள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த அவர், "மென்பொருள் துறை தேக்கமடைந்தாலும், ஒருவேளை அந்தத் துறையே இல்லாமல் போனாலும், இந்தியாவில் நாம் உருவாக்க வேண்டியவை இன்னும் லட்சக்கணக்கில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சில முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கிரீன் கார்டு தொடர்பான தொழிலாளர் சான்றிதழ் நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி புதிய தொழில்களையும் வாய்ப்புகளையும் உருவாக்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள் துறையின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள சூழலில், ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F10%2F12%2F10-2026-10-12-13-50-12.jpg&w=3840&q=75)