தமிழகத்தில் அரிசி விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் இரண்டு மாதங்களுக்குள் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு அரிசி பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது அந்த மாநிலங்களில் போதிய மழை பெய்யாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிசி விலை உயர்வு ஒருபுறம் இருக்க, சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மீண்டும் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, சந்தையில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை தற்போது 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 220 ரூபாய்க்கு விற்பனையான நீள மிளகாய், தற்போது 300 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F10%2F12%2F10-2026-10-12-13-50-12.jpg&w=3840&q=75)



