பூவிருந்தவல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 15 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஓட்டுநர் இல்லா நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படுகின்றன. ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் 900 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பீக் ஹவர் நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பீக் ஹவர் சேவை இருக்காது. பயணக் கட்டணம் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை சேவை இயக்கப்படுகிறது. அக்டோபர் 12-ம் தேதி முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இரு திசைகளிலும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.


