ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்குவது குறித்த விவாதத்தின் போது, அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் மற்றும் கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மைக் வால்ட்ஸ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கியூபா அமைச்சர் மேடைக்கு அருகே சென்றதால் இந்த மோதல் உருவானது. ஐநா என்பது கம்யூனிச சர்வாதிகார நாடு அல்ல என்று குறிப்பிட்ட வால்ட்ஸ், கியூபா பிரதிநிதியை பின்வாங்குமாறு வலியுறுத்தினார். மேலும், கியூபா அரசின் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைகளை விமர்சித்த அவர், அமெரிக்கத் தடையை நீக்கக் கோரும் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரோட்ரிக்ஸ், அமெரிக்க தூதர் பொய் கூறுவதாகவும், அவரது கருத்துக்கள் ஐநா சபையின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் சாடினார். அவையில் அமைதியை நிலைநாட்ட ஐநா பொதுச்சபை தலைவர் தலையிட்டார். கியூபா தூதுக்குழுவினருக்குப் பேசுவதற்கு முறையான வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.



