சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், தான் ஒரு முதல்வராக இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும், உங்கள் அண்ணனாகவே வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
உங்களுக்காகவும் சேர்த்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்ட அவர், தான் இங்கு அரசியல் பேச வரவில்லை என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.


