தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் அரசு மதுபானக் கடைகளில் (டாஸ்மாக்) மொத்தம் ரூ.677 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கியதால் இந்த விற்பனை அதிகரித்துள்ளது. இதில், நவம்பர் 6-ம் தேதி ரூ.185 கோடியும், 7-ம் தேதி ரூ.263 கோடியும், 8-ம் தேதி ரூ.229 கோடியும் விற்பனையாகியுள்ளது.
மண்டல வாரியாகப் பார்த்தால், திருச்சி மண்டலம் ரூ.153 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை ரூ.150 கோடி, சேலம் ரூ.134 கோடி, மதுரை ரூ.133 கோடி மற்றும் கோவை ரூ.107 கோடி என விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ரூ.789 கோடிக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு விற்பனை சற்று குறைந்துள்ளது.
பண்டிகை நாளில் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களைக் கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்கேனிங் முறை ஆகியவை விற்பனை சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த விற்பனை இலக்கு எதிர்பார்த்த அளவிலேயே உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


