இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எஸ்ஐபி (SIP) முதலீடு அக்டோபர் மாதத்தில் ஒரு சதவீதம் குறைந்து ரூ.32,160 கோடியாகப் பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த முதலீடு ரூ.32,490 கோடியாக இருந்தது. அக்டோபரில் சுமார் 51 லட்சம் புதிய எஸ்ஐபி கணக்குகள் தொடங்கப்பட்டாலும், சுமார் 59 லட்சம் கணக்குகள் நிறுத்தப்பட்டதால் அல்லது காலாவதியானதால், எஸ்ஐபி நிறுத்த விகிதம் (SIP Stoppage Ratio) 116 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சிறிய நிறுவனப் பங்குகளில் (Small Cap) முதலீட்டாளர்களின் ஆர்வம் சற்று குறைந்த நிலையில், லார்ஜ் மற்றும் மிட் கேப் பிரிவுகள் ரூ.8,484 கோடி புதிய முதலீட்டை ஈர்த்துள்ளன. தங்கம் சார்ந்த இடிஎஃப் (Gold ETF) முதலீடு 22 சதவீதம் சரிந்து ரூ.3,474 கோடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், வெள்ளி இடிஎஃப் (Silver ETF) முதலீடு 57 சதவீதம் அதிகரித்து ரூ.3,092 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சொத்து மதிப்பு (AUM) ரூ.83.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.



