ஈரானில் இதுவரை தாக்குதல் நடத்தாத பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரான் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்துள்ளதாக அவர் கூறினார்.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு ஏற்படலாம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இதுவரை பல தலைவர்களை ஈரான் இழந்துள்ளதாகவும், அடுத்த கட்ட தாக்குதல்களில் மேலும் பலரை அழிப்போம் என்றும் அவர் கூறினார்.
ஈரான் ரஷ்யா ஆதரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
1Likes
0Dislikes
