ETN NewsNews. Trust. Impact.
TN Election 2026

தேர்தலை புறக்கணித்த கிராமங்கள் எவை?

25 ஏப்., 2026, 01:42 AM
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று, மாநிலம் முழுவதும் சராசரியாக 85.15% என்ற வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட குடுவையூர் கிராம மக்கள், சாலை வசதி கேட்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனையடுத்து அவர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல், விருதுநகர் கீழ அழகியநல்லூர் பகுதியில், சில நாட்களுக்கு முன்பு இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு தரப்பினர் வாக்களிப்பதை புறக்கணித்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட குளத்துவாய்பட்டி கிராம மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் பகுதி மக்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை எனக் கூறிய கிராம மக்கள், கருப்புக்கொடியேற்றி வாக்களிப்பதைப் புறக்கணித்தனர். அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி கம்பூதிநாயக்கன்பட்டியில், வாக்குச்சாவடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியான மக்கள், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, உடைக்கப்பட்ட நல்லதங்காள் கோயில் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்வது தொடர்பான விவகாரத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், தேர்தலைப் புறக்கணித்து மக்கள் போராட்டம் நடத்தினர். கொள்ளிடம் அருகே உள்ள முதலைமேடு திட்டு கிராம மக்கள், முறையான சாலைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் காரணம் காட்டி, தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். மானாமதுரை அருகே போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்ததைக் கண்டித்து, அவரது உறவினர்கள் தேர்தலைப் புறக்கணித்து 47ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு காரணமான 16 காவலர்களை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ள உறவினர்கள், நீதி கிடைக்க வலியுறுத்தி வாக்குப்பதிவு நாளிலும் போராட்டத்தை மேற்கொண்டனர்
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!
Tamil Nadu
21 ஜூன், 2026, 12:08 PM

முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில...

7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...