ETN NewsNews. Trust. Impact.
TN Election 2026

இன்று மாலை கருத்து கணிப்பு வெளியாகும்

29 ஏப்., 2026, 01:55 AM
இந்தியத் தேர்தல் ஆணையம், ஐந்து மாநிலத் தேர்தலும் நிறைவடைந்த பிறகே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இதில் எது கடந்த தேர்தல்களில் சரியாக இருந்துள்ளன என்பது குறித்தும் நமக்கு கேள்வி எழும். உண்மையில் கடந்த தேர்தல்களில் இரண்டு கருத்துக் கணிப்புகளும் சரியாகவும், தவறாகவும் இருந்துள்ளன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. அதனை கடந்த 2011 தேர்தல் முதல் கால வாரியாக பார்க்கலாம். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் அதிமுக 120 முதல் 130 இடங்கள் வரை வரும் எனவும், திமுக 110 – 120 இடங்கள் வரும் எனவும் கணித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு 155 முதல் 170 இடங்கள் வரையிலும், திமுக கூட்டணிக்கு 65 முதல் 100 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என கணிக்கப்பட்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 203 இடங்களிலும், அதிமுக தனித்து 150 இடங்களிலும் வென்றது. திமுக கூட்டணி 31 இடங்களிலும், திமுக தனித்து 23 இடங்களிலும் வென்றது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், திமுக ஆட்சியில் அமரும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி 120 முதல் 140 எனவும், அதிமுக கூட்டணி 85 முதல் 120 எனவும் கணிக்கப்பட்டன. ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக தனித்தே 134 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 98 இடங்களிலும், திமுக தனித்து 89 இடங்களிலும் வென்றது. ஜெயலலிதா முதல்முறையாக இரண் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஓரளவு சரியாக இருந்தன. திமுக கூட்டணி 150 முதல் 160 இடங்கள் பெறும் எனவும், அதிமுக 55 முதல் 65 வரை வரும் எனவும் கணிக்கப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி 160 முதல் 185 வரையிலும், அதிமுக 35 முதல் 70 வரையிலும் என கணிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், திமுக தனித்து 133 இடங்களிலும் வென்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், அதிமுக தனித்து 66 இடங்களிலும் வென்றது.
2Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!
Tamil Nadu
21 ஜூன், 2026, 12:08 PM

முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில...

7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...