பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணையின் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிவேக வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட மின்னணு இலக்கை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
இந்த முதல் கட்ட சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் வெற்றிகரமாக எட்டப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


