கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து உதவலாமே தவிர, அரசுப் பணி வழங்குவதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எந்தப் பணியும் சாதாரணமானதல்ல என்றும், அது ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அமையும் என்றும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது. அரசுப் பணி வழங்கப்பட்டதை எதிர்த்து நாதக மற்றும் மஜக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
3விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

