தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பின்னணிப் பாடகி ஜமுனா ராணி (88), பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். முதுமை தொடர்பான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை மதியம் கல்லஹள்ளியில் நடைபெறவுள்ளன.
1938-ல் பிறந்த ஜமுனா ராணி, தனது ஏழாவது வயதில் 'தியாகய்யா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல தசாப்தங்களாக நீடித்த தனது இசைப் பயணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே', 'நான் சிரித்தால் தீபாவளி' உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தென்னிந்தியத் திரையிசையின் பொற்காலத்தில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, தமிழக அரசு 1998-ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், அண்ணா விருதும் வழங்கி கௌரவித்தது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

