முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனை முன் ஜாமீன் உத்தரவில் 6 நாட்கள் விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டாஸ்மாக் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளதால், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த இந்த கால அவகாசம் தேவை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து இந்த விலக்கு கோரப்பட்டுள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் காவல் நிலையத்தில் கண்டிப்பாக ஆஜராவதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஒரு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


