காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு முரணாக இல்லாத வகையில், மாநில எல்லைக்குள் நீரைப் பயன்படுத்துவதற்கும், அதன் பலன்களை அனுபவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR), காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


