தமிழகத்தின் நிதி நிலையை வலுப்படுத்தவும், புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறியவும் பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் வருவாய் பெருக்கக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநிலத்தின் நிதித் தேவைகளை நிறைவு செய்து, சுயசார்பு நிலையை எட்டுவதற்கான வழிமுறைகளை இக்குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரித்தல், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்காதாயம், நிலம் மற்றும் சொத்துகளை பணமாக்குதல், பயனர் கட்டணங்களை மறுசீரமைத்தல் போன்ற துறைகளில் இக்குழு கவனம் செலுத்தும்.
மேலும், வருவாய் கசிவுகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கத் தேவையான கொள்கை மாற்றங்கள் குறித்தும் இக்குழு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

