தாய்த் தமிழுக்கே எப்போதும் முதலிடம் அளிக்கப்படும் என்றும், தாய்மொழியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளும் எந்தவொரு முயற்சியையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தாய்மொழியைப் புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ள தவெக, இதற்காகத் தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

