மக்களவையில் பொதுத் தேர்வுகள் (முறைக்கேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 மீதான விவாதத்தின் போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நீட் நுழைவுத்தேர்வால் அனிதா உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் அனிதாவின் பெயரை முன்வைத்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


