தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான விதிகளை வகுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த விதிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, இதற்கான அறிக்கையைத் தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
4விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

