தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக போராடிப் பெற்றுத் தந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது மருத்துவப் படிப்பில் இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது லட்சக்கணக்கான மக்களின் உயிர் சார்ந்த பிரச்சினை எனத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசு உரிய விளக்கத்தை மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

