திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பெண்மணி ஒருவருக்கு, ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் வந்துள்ளது. ஆர்.எம். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதால் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸால் அதிர்ச்சியடைந்துள்ள அந்தப் பெண்மணி, தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், தினசரி வேலை மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கூட எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இது குறித்து அவர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

