வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதாவை, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோடு, தமிழ்நாட்டில் இதுவரை முதன்மைப் பாடலாகப் பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்தை நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சட்ட மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது என கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


