முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் எஸ். விசாகன் மற்றும் சில அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான புகாரில் முகாந்திரம் இருந்ததையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 28, 2026 அன்று இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜூலை 29, 2026 அன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், மதுபான ஆலைகள், போக்குவரத்து நிறுவனங்கள், பாட்டிலிங் ஆலைகள் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் நடைபெற்றது. இதில் முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையின் போது உரிமையாளர் இல்லாத ஒரு வளாகம், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

