கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த தகவல் உரிமைச் சட்டக் கேள்விகளுக்கு அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணைத் திட்டமானது சிவனசமுத்திரம் மின் உற்பத்தித் திட்டத்துடன் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீரை அதிக அளவில் பயன்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் இருப்பதால், அதனைத் திருப்பி அனுப்பியதாக காவிரி நதிநீர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
3விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


