தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஜூலை 31) நடைபெறவிருந்த கோழி இறைச்சி விற்பனையாளர்களின் கடையடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தீவனக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோழிக்கறி ஒருங்கிணைப்புக் குழு அளித்த உறுதிமொழியை ஏற்று, இந்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கோழி இறைச்சி விற்பனை வழக்கம் போல் நடைபெறும்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

