பாகிஸ்தானின் பிராட் பீக் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, உலகப்புகழ் பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 பேர் மாயமாகியுள்ளனர். வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், பாகிஸ்தான், ஓமன், சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஆல்ப்பைன் கிளப் உறுதிப்படுத்தியுள்ளது. மாயமானவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத சூழல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமானவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க அரசு அமைப்புகளுடன் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் உதவி மற்றும் பிற மீட்பு உபகரணங்களை விரைவாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், வானிலை மற்றும் தற்போதைய சூழலைப் பொறுத்தே மீட்புப் பணிகளின் வேகம் அமையும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் பிரிட்டிஷ் சிறப்புப் படை வீரரான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14 சிகரங்களை ஏறி சாதனை படைத்தவர். இந்த 14 சிகரங்களையும் இருமுறை ஏறிய முதல் நபர் என்ற இலக்கை நோக்கி அவர் தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்





