நீட் தேர்வு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு (EWS) ஆகியவற்றுக்கு எதிராக திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமையும் திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவது வியப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


