டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான விசா, தனது 2,600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பணிநீக்கத்தால் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் காரணமாக, பல்வேறு நிறுவனங்களிலும் இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



