அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, H-1B மற்றும் L-1 விசா விண்ணப்பங்களுக்கான '9-11 ரெஸ்பான்ஸ் அண்ட் பயோமெட்ரிக் என்ட்ரி-எக்சிட்' கட்டணத்தை விரிவுபடுத்தியுள்ளது. செப்டம்பர் 9 முதல், புதிய விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமின்றி, விசா கால நீட்டிப்பு கோரும் விண்ணப்பங்களுக்கும் இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, தகுதியுள்ள நிறுவனங்கள் H-1B விசா நீட்டிப்புக்கு 4,000 அமெரிக்க டாலர்களும், L-1 விசா நீட்டிப்புக்கு 4,500 அமெரிக்க டாலர்களும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பணியாளர் அதே நிறுவனத்தில் தொடர்ந்தாலும் அல்லது புதிய நிறுவனத்திற்கு மாறினாலும் இந்த கட்டணம் பொருந்தும். அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் H-1B அல்லது L-1 விசா வைத்திருப்பவர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த கட்டண விதிமுறை பொருந்தும் என கூட்டாட்சி பதிவேடு (Federal Register) தெரிவித்துள்ளது.
