மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி புதிய 'என்கோர்' (Encore) பதிப்பாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ல் வெளியான அசல் பதிப்பைக் காட்டிலும், இந்த சிறப்புப் பதிப்பு 4 நிமிடங்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. இதன்படி, இப்படம் மொத்தம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் (185 நிமிடங்கள்) ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


