டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது 10-வது சதத்தைப் பதிவு செய்ததன் மூலம், தென்ஆப்பிரிக்க வீரர் குவின்டான் டி காக் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்துள்ளார். இந்த மைல்கல்லின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாபர் அசாம் 13 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக விராட் கோலி, குவின்டான் டி காக் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 10 சதங்களுடன் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் குவின்டான் டி காக், இந்தச் சாதனையின் வாயிலாக மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F04%2Fkockviratkohli-2026-09-04-12-47-22.jpg&w=3840&q=75)



