FlyDubai விமானத்தில் பயணம் செய்த சுமார் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகையை மென்கைண்ட் பார்மா நிறுவனம் வழங்கியுள்ளது.
நெருக்கடியான சூழலில் அவர் வெளிப்படுத்திய அசாதாரணமான தைரியம், நிதானம் மற்றும் பொறுப்புணர்வைப் பாராட்டி இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.




