திபெத் பகுதியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 8:03 மணிக்கு 7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. இது அருணாச்சல பிரதேசத்தின் பாண்டினுக்கு வட-வடமேற்கே 489 கி.மீ தொலைவில், 173 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரவு 8:42 மணிக்கு 5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அருணாச்சல பிரதேசத்தின் பாசருக்கு வட-வடமேற்கே 323 கி.மீ தொலைவில், 15 கி.மீ ஆழத்தில் பதிவானது. மேலும், இரவு 8:29 மணிக்கு சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இது பாங்கினுக்கு வட-வடமேற்கே 505 கி.மீ தொலைவில், 15 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்தது.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தப் பேரிடர் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பெருமளவில் சேதப்படுத்திய நிலையில், தற்போது இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.





