மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டண விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கட்டண விவரங்களை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுச் சிகிச்சை, பரிசோதனைகள், அறுவை சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.


