ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், கே.ஜி. செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள சத்வால்-நாகி பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்களில் லஷ்கர்-இ-தைபா அமைப்பின் முக்கியத் தளபதி ஒருவரும் அடங்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


