சவூதி அரேபியாவுக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூத்தி அமைப்பின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.




