பிரான்சில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பல்வேறு நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் இந்தியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதி வெடித்த வன்முறையைத் தொடர்ந்து, பாரிஸ், லில்லி, லியோன் மற்றும் நைஸ் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மார்சேய் நகரிலும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் சனிக்கிழமை மீண்டும் பேரணிகள் நடத்தப்பட உள்ளதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதியளித்துள்ளார்.
பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்பவர்கள் உள்ளூர் செய்திகள் மூலம் சூழலைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தை +33 6 48 34 00 63 என்ற எண்ணிலோ அல்லது cons.paris@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். மார்சேய் துணைத் தூதரகத்தை +33 7 43 16 25 59 என்ற எண்ணிலும் அல்லது cgo.marseille@mea.gov.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் அணுகலாம்.



