தமிழகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்துவது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு திரைப்பட எக்ஸிபிட்டர்ஸ் சங்கம் சார்பில் முதலமைச்சர் விஜயிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளின் தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் விலையை 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் 10 சதவீத விலை உயர்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் கோரியுள்ளனர். மேலும், திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை 6 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தவும், மின்சார கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திரையரங்குகளை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்த வேண்டும் என்றும், கூடுதல் திரைகள் அமைப்பதற்கான அனுமதியை எளிமையாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என அந்த சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F10%2F31%2F6-2026-10-31-13-24-03.jpg&w=3840&q=75)

