ஈரானின் அரசு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், அணு ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. இத்தகைய அவசர காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
அணு ஆயுத வெடிப்பினால் ஏற்படும் தீவிரமான ஒளியைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வெடிப்பு நிகழும் நேரத்தில் வெளியில் இருப்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மறைந்து கொள்ளுமாறும் அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

