இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 4 பில்லியன் டாலர் நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்த நிதியுதவி இனி தேவையில்லை என்றும், இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேல் தனது பாதுகாப்புத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிதி வலிமையைப் பெற்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
தற்போதைய அமெரிக்க ராணுவ உதவித் திட்டம், 2018-ல் தொடங்கி 2028 வரை நடைமுறையில் இருக்க வேண்டிய 10 ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ உதவி காலம் முடிவுக்கு வருவதை ஏற்கனவே பிரதமர் நெதன்யாகு சுட்டிக்காட்டியிருந்தார். புதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும், தற்போதுள்ள உதவித் திட்டத்திற்கு மாற்றாக எந்தவொரு குறிப்பிட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.



