ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, எதிரணி கோல் கீப்பருடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அந்த கால்பந்து வீரர் உயிரிழந்தார். மைதானத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

