இஸ்ரேல் பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறியதால் தோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளை அந்நாட்டின் தேர்தல் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் நெதன்யாகு கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சியான ஐசன்கோட் கூட்டணி 48 இடங்களையும், பாலஸ்தீன அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் எந்தக் கூட்டணிக்கும் கிடைக்காததால், அங்கு புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



