தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கும் பணி இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவோருக்காக, நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 11,197 பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.


