அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எலான் மஸ்க் சுமார் 450 மில்லியன் டாலர் (ரூ. 4,243 கோடி) செலவு செய்திருந்தார்.
இருப்பினும், தேர்தலில் குடியரசுக் கட்சியினர் தோல்வியைச் சந்தித்தது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேர்தலுக்கு முன்னதாக அவர் பதிவிட்டிருந்த 'குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்ற கருத்தை தற்போது நீக்கியுள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் முறையே 4. 9 சதவீதம் மற்றும் 7 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன.





