அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவிக்க வலியுறுத்தி, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு வம்சாவளியினரில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த விடுமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.




