கடந்த அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் 20.9 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக பெஞ்ச்மார்க் மினரல் இன்டெலிஜென்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 1.75 கோடி மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய சந்தையில் மின்சார வாகன விற்பனை 36 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியில் விற்பனை 80 சதவீதம் உயர்ந்துள்ளது. வட அமெரிக்காவில் 1.3 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி, 24 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பிற நாடுகளிலும் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் உள்நாட்டு விற்பனை 12 சதவீதம் சரிந்து 11.4 லட்சமாக உள்ளது. இருப்பினும், சீன நிறுவனங்களின் புதிய எரிசக்தி வாகன ஏற்றுமதி 6 லட்சத்தை எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகளவில் மின்சார வாகன சந்தையில் போட்டி தீவிரமடைந்து வருவதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.




